சூரிய பெயர்ச்சி: நவம்பரில் ராஜயோகம் பெறும் 3 ராசிகள் இவை தான்!

ஜோதிடத்தில் கிரகங்களின் தலைவனாக கருதப்படுபவர் சூரியன். ஆன்மா, தன்னம்பிக்கை, ஆற்றல் மற்றும் கௌரவத்திற்கு காரணமான சூரியன், சிம்ம ராசியின் அதிபதி ஆவார்.

சூரியன் மாதம் ஒருமுறை தனது ராசியை மாற்றுவது வழக்கம். அதன்படி, எதிர்வரும் நவம்பர் 16ஆம் திகதி துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு சூரியன் பெயர்ச்சி ஆகிறார். இந்த பெயர்ச்சி டிசம்பர் 16ஆம் திகதி வரை நீடிக்கிறது.

இந்த சூரிய பெயர்ச்சியால் 12 ராசிகளுக்கும் தாக்கம் இருந்தாலும், குறிப்பாக 3 ராசியினருக்கு ராஜயோகம் கிடைக்கப் போவதாக ஜோதிடர்கள் கணித்துள்ளனர்.

1. ரிஷபம்:
ரிஷப ராசியினருக்கு 7வது வீட்டில் சூரியன் சஞ்சரிப்பதால் வாழ்க்கையில் இருந்த பிரச்சனைகள் விலகி நல்ல மாற்றங்கள் ஏற்படும். கூட்டுத் தொழில் செய்பவர்களுக்கும், பணிபுரிபவர்களுக்கும் இது மிகவும் சாதகமான காலம். கடின உழைப்பிற்கான பலன் கிடைக்கும், புதிய வருமான வழிகள் உருவாகும்.

2. மிதுனம்:
மிதுன ராசியினருக்கு 6வது வீட்டில் சூரியன் இருப்பதால் தன்னம்பிக்கை அதிகரிக்கும். பணியிடத்தில் முன்னேற்றத்திற்கான சிறந்த வாய்ப்புகள் கிடைக்கும். தொழிலதிபர்கள் மற்றும் வியாபாரிகளுக்கு புதிய ஒப்பந்தங்கள் மற்றும் அதிக லாபம் கிடைக்கும்.

3. மகரம்:
மகர ராசியினருக்கு 11வது வீட்டில் சூரியன் பெயர்ச்சியாவதால் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் கிடைக்கும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும், சமூகத்தில் அந்தஸ்து உயரும், திடீர் நிதி ஆதாயங்கள் கிடைக்கும். வணிகர்களுக்கு நல்ல லாபம் கிடைப்பதுடன் உறவுகளும் சிறப்பாக இருக்கும்.