செஞ்சி சிறுமி வழக்கில் புதிய தடயங்கள்? 3 நாட்களில் முடிவுக்கு வருமா விசாரணை?
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே ஏழு வயது சிறுமி ஹேமலதா மாயமான சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் இன்னும் மூன்று நாட்களில் வழக்கு முடிவுக்கு கொண்டு வரப்பட்டு மர்மம் முழுமையாக உடைக்கப்படும் என்று சிபிசிஐடி டிஎஸ்பி வேல்முருகன் தெரிவித்துள்ளார். இந்த வழக்கில் நடைபெற்று வரும் விசாரணை குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
செஞ்சி 7 வயது சிறுமி காணாமல் போன விவகாரம்
மேலும் சிபிசிஐடி தனிப்படை அதிகாரிகள் ஆறாவது நாளாக விசாரணையை தீவிரப்படுத்தியுள்ள நிலையில், கோவில் பூசாரி, கேபிள் டிவி ஊழியர் ,சிறுமிக்கு ஜாதகம் எழுதியவர் உள்ளிட்ட பலரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த மரத்தாண்டாங்கல் கிராமத்தைச் சேர்ந்த7 வயது சிறுமி ஹேமலதா கடந்த 10.10.2026 அன்று பிறந்த நாள் கொண்டாடியுள்ளார். அன்று இரவு தனது தாயின் அருகில் தூங்கிக்கொண்டிருந்த போது,மாயமாகியுள்ளார்.அதன்பிறகு, எங்கு தேடியும் கிடைக்காததால், காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்க்கொண்டு வந்தனர்.
வழக்கை 3 நாட்களில் முடிக்க சிபிசிஐடி திட்டம்
இந்த வழக்கில் 7 நாட்களுக்கு மேலாகியும் சிறுமி கிடைக்காததால்,துப்பு கிடைக்காமல் திணறி தமிழக அரசின் உத்தரவின் பேரில் இவ்வழக்கு சிபிசிஐடி பிரிவுக்கு மாற்றப்பட்டது. கடந்த 6 நாட்களாக சிபிசிஐடி அதிகாரிகள் கிராமத்தில் முகாமிட்டு தீவிர புலன்விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தொடர்ந்து சிபிசிஐடி அதிகாரிகள் சிறுமியின் பெற்றோர், பாட்டி ,கிராம மக்களிடம் விசாரணையை தொடங்கினர். மேலும் அந்த பகுதியில் இருந்தசிசிடிவி காட்சிகளை கைப்பற்றி ஆய்வு மேற்கொண்டனர் இருப்பினும் விசாரணையில் எந்த ஒரு முன்னேற்றமும் இல்லாமல் இருந்தது.
ஆடு மேய்த்த இடத்தில் கசிந்த ரகசியம்
அரவிந்த் கொடுத்த க்ளூசிறுமியின் கடத்தலுக்கும் தனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று ராஜதுரை ஆரம்பத்தில் சாதித்து வந்தான். ஆனால், போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில் மற்றொரு முக்கியத் தகவல் வெளிச்சத்துக்கு வந்தது
சிறுமியின் தந்தை வடிவேலு கிராமப்புறங்களில் ஆடு மேய்க்கும் தொழிலில் ஈடுபட்டு வந்தார். அவருடன் அதே பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரும் ஆடு மேய்க்கச் சென்றுள்ளார்.
அப்போது வடிவேலு எதார்த்தமாக எங்கள் வீட்டுப் பீரோவில் அவசரத் தேவைக்காக இரண்டரை சவரன் நகையும், அறுபதாயிரம் ரூபாய் பணமும் வைத்திருக்கிறோம்" என்று அந்தப் பெண்ணிடம் கூறியுள்ளார்.
அந்தப் பெண், இந்தத் தகவலைத் தனக்குப் பழக்கமான அரவிந்த் என்பவரிடம் தெரிவித்துள்ளார். இந்த அரவிந்த், கொள்ளையன் ராஜதுரையின் நெருங்கிய கூட்டாளி ஆவார்.
சம்பவத்தன்று நள்ளிரவு மது விருந்து
சம்பவம் நடந்த அன்று இரவு, சிறுமியின் வீட்டின் அருகிலேயே அரவிந்த், ராஜதுரை மற்றும் இவர்களது மற்றொரு நண்பர் என மூன்று பேரும் அமர்ந்து நள்ளிரவு வரை ஒன்றாக மது அருந்தியுள்ளனர். அப்போது, வடிவேலுவின் வீட்டில் நகையும் பணமும் இருக்கும் தகவலை அரவிந்த் ராஜதுரையிடம் கூறியுள்ளார்.
அமாவாசை முடிந்து கொள்ளையடிக்கத் திட்டம் போட்டுக் கொண்டிருந்த ராஜதுரைக்கு இது பெரும் வாய்ப்பாகத் தெரிந்தது.
ஆனால் சிபிசிஐடி போலீசார் ராஜதுரையின் செல்போனைப் பறிமுதல் செய்து தீவிர சைபர் தடயவியல் ஆய்வு மேற்கொண்டனர். அதில், அவன் நான்கு வெவ்வேறு சிம் கார்டுகளைப் பயன்படுத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
தான் கொள்ளையடிக்கச் செல்லும் ஊர்களில் போலீசாரின் கண்காணிப்பில் சிக்காமல் இருப்பதற்காக, ஒவ்வொரு இடத்திலும் சிம் கார்டுகளை மாற்றிப் பயன்படுத்துவதை அவன் வழக்கமாகக் கொண்டிருந்தது உறுதியானது.
பள்ளி வளாகத்தில் 4 மணி நேர விசாரணை
இந்த பகீர் திருப்பங்களைத் தொடர்ந்து திங்கட்கிழமை காலை ராஜதுரையை பலத்த பாதுகாப்புடன் சிறுமி படித்த ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு சிபிசிஐடி அதிகாரிகள் அழைத்துச் சென்றனர்.
அங்கு சிறுமியின் தாய் பவானியையும் நேரில் வரவழைத்து, ராஜதுரையை அவர் முன்னிலையில் வைத்து சுமார் 4 மணி நேரத்திற்கும் மேலாக கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.
அதன் தொடர்ச்சியாக ஆலம்பூண்டியிலிருந்து செஞ்சி செல்லும் சாலையில், பெட்ரோல் பங்க் எதிரே அமைந்துள்ள சுடுகாட்டுப் பகுதிக்கு ராஜதுரையை அதிகாரிகள் நேரில் அழைத்துச் சென்றனர்.
அங்கு புதிதாக நடைபெற்று வரும் கட்டுமானப் பணிகள் நடைபெறும் பகுதிகள், புதர்கள் மற்றும் இடிபாடுகள் நிறைந்த இடங்களில் ராஜதுரையை வைத்து விரிவான கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இந்த நிலையில் சிபிசிஐடி டிஎஸ்பி வேல்முருகன் விசாரணை மிகத் தீவிரமான இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது; இன்னும் மூன்று நாட்களுக்குள் இந்த வழக்கை முழுமையாக முடிப்போம் என்று நம்பிக்கையுடன் தெரிவித்தார்.
பூசாரி, கேபிள் ஊழியரிடம் தீவிர விசாரணை
கேபிள் டிவி ஒயர்மேன்: மரத்தாண்டாங்கல் கிராமத்தைச் சேர்ந்த கேபிள் டிவி ஒயர்மேன் திருமலை.
கோயில் பூசாரி: அதே ஊரைச் சேர்ந்த ஆஞ்சநேயர் கோயில் பூசாரி அர்ஜுனன்.
எதிர் வீட்டு நபர்: சிறுமியுடன் அண்மையில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய எதிர் வீட்டைச் சேர்ந்த சதீஷ்.
ஜாதகம் எழுதியவர்: ஆலம்பூண்டி பகுதியில் தையல் கடை நடத்தி வருபவரும், சிறுமிக்கு ஜாதகம் கணித்துக் கொடுத்தவருமான காத்தவராயன்.
இவர்கள் அனைவரையும் தனித்தனியாக அழைத்துச் சென்று அதிகாரிகள் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர்.
தாயிடம் தொடரும் கிடுக்கிப்பிடி விசாரணை
இதனிடையே, காலையிலிருந்து சிறுமியின் தாய் பவானி மற்றும் அவரது மூத்த அக்காவிடம் பள்ளி வளாகத்தில் வைத்து விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையின் முடிவில் அக்காவை வீட்டிற்கு அனுப்பி வைத்த அதிகாரிகள், தாய் பவானியிடம் மட்டும் தொடர்ந்து தீவிரமாக வாக்குமூலங்களைப் பதிவு செய்து வருகின்றனர். குடும்ப உறுப்பினர்கள் மற்றும் கிராமத்தைச் சேர்ந்தவர்களிடம் மாறி மாறி விசாரணை நடத்தப்பட்டு வருவதால், சிறுமி மாயமான மர்மம் இன்னும் ஓரிரு நாட்களில் முழுமையாக வெளிச்சத்துக்கு வரும் எனப் பொதுமக்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.
.png)