டெங்கு மரணங்கள் 53 ஆக உயர்வு!
நாட்டில் டெங்கு நோய்த்தொற்றின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இந்த ஆண்டில் இதுவரை டெங்கு காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 53 ஆக அதிகரித்துள்ளது.
தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் தகவலின்படி, இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 74,447 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு சுகாதாரத் தரப்பினர் அறிவுறுத்தியுள்ளனர்.
Tags:
இலங்கை செய்தி
