2026 சாதாரண தரப் பரீட்சை விண்ணப்ப கால அவகாசம் எதிர்வரும் 23 ஆம் திகதியுடன் நிறைவு!


2026 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு விண்ணப்பிக்கும் காலம் எதிர்வரும் 23 ஆம் திகதியுடன் நிறைவடைவதாகப் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

தேசிய அடையாள அட்டை இல்லாமை விண்ணப்பிப்பதற்கு தடையாக இருக்காது எனத் தெரிவித்துள்ள திணைக்களம், அனைத்து விண்ணப்பதாரர்களும் குறிப்பிட்ட கால எல்லைக்குள் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது.

பரீட்சை அறிவித்தலில் வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களுக்கு அமைய விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எந்தவொரு காரணத்திற்காகவும் விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் இறுதி திகதி நீடிக்கப்படமாட்டாது எனப் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலதிக தகவல்கள் மற்றும் சந்தேகங்களுக்கு 1911 என்ற துரித சேவை இலக்கம் அல்லது 0112784537, 0112786616, 0112784208 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்புகொள்ள முடியும்.

மேலும், 0112784422 என்ற தொலைநகல் இலக்கத்தின் ஊடாகவும் தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும் எனப் பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.