விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில், திமுக மற்றும் அதிமுக போன்ற பிரதான திராவிடக் கட்சிகளை பின்னுக்குத் தள்ளி, நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 100க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது.
இந்நிலையில், இந்த வெற்றிக்கு திமுக சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
தனது வெற்றி சான்றிதழைப் பெற்றுக்கொண்ட பின் ஊடகங்களிடம் பேசிய அவர்,
“இது மக்களின் தீர்ப்பு. இதில் எங்களுக்கு பெரிய பாதிப்பு எதுவும் இல்லை. எனது தொகுதி மக்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.
மக்கள் சேவைக்கு எப்போதும் தலைவணங்குகிறோம். புதிய முதல்வர் திரைத்துறையிலிருந்து வந்தவராக இருந்தாலும், மக்களுக்கு சிறப்பாக சேவை செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
மக்களின் தீர்ப்புக்கு தலைவணங்கி புதிய தலைவருக்கும் தனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன்” என்றார்.
Tags:
இந்திய செய்தி
