இலங்கை வரவுள்ளார் வியட்நாம் ஜனாதிபதி தோ லாம்!


வியட்நாம் சோசலிசக் குடியரசின் ஜனாதிபதி தோ லாம் அவர்கள் எதிர்வரும் மே மாதம் 07 ஆம் திகதி உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வரவுள்ளார்.

அவர் மே 08 ஆம் திகதி இலங்கை நாடாளுமன்றத்தில் உரையாற்றவும் உள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த உயர்மட்ட இராஜதந்திர விஜயத்தின் மூலம் இலங்கை மற்றும் வியட்நாம் இடையிலான இருதரப்பு உறவுகள் புதிய பாதையை நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது.