நாடு முழுவதும் உள்ள அனைத்து மதுபான விற்பனை நிலையங்களும் மூடப்படும்!
தமிழ் – சிங்களப் புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு, ஏப்ரல் 13 மற்றும் 14 ஆகிய தினங்களில் நாடு முழுவதும் உள்ள அனைத்து மதுபான விற்பனை நிலையங்களும் மூடப்படும் என கலால் திணைக்களம் அறிவித்துள்ளது.
இந்தக் காலப்பகுதியில் மதுபானம் விற்பனை செய்து கலால் சட்டங்களை மீறும் உரிமதாரர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சட்டவிரோத மதுபான விற்பனை தொடர்பான தகவல்களை 1913 என்ற உதவி இலக்கத்திற்கு அறிவிக்குமாறும் பொதுமக்களிடம் கோரப்பட்டுள்ளது.
அத்துடன், பண்டிகைக் காலத்தில் சட்டவிரோத மதுபான விநியோகம் செய்யும் குற்றவாளிகளைக் கைது செய்யும் நோக்கில், காலி, அனுராதபுரம், கண்டி, குருநாகல் உள்ளிட்ட பகுதிகளிலும், நாடு முழுவதும் செயல்படும் சிறப்பு கலால் நடவடிக்கைப் பிரிவுகள் உயர் எச்சரிக்கையில் இயங்கும் எனவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.
Tags:
இலங்கை செய்தி
