நாட்டின் பல பகுதிகளுக்கு நீர் விநியோகத்தை மட்டுப்படுத்த தீர்மானம்!


நாட்டில் நிலவி வரும் வறட்சியான காலநிலையின் காரணமாக குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

இதனால் நாட்டின் பல பகுதிகளில் நீர் விநியோகத்தை மட்டுப்படுத்த தீர்மானித்துள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

கொழும்பு உள்ளிட்ட பல பிரதேசங்களுக்கு நீர் விநியோகிக்கும் கலதுவாவ, லபுகம நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் கணிசமாகக் குறைவடைந்துள்ளதாக அச் சபை சுட்டிக்காட்டியுள்ளது.

இந்நிலையில் நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.