இன்றைய தினமும் பல பகுதிகளில் நீர் வெட்டு!


நாட்டில் நிலவி வரும் வறட்சியான காலநிலையின் காரணமாக லபுகம, கலடுவாவ ஆகிய நீர் சுத்திகரிப்பு நிலையங்களின் நீர்த்தேக்கங்களில் நீர் மட்டம் குறைந்துள்ளது.

இதனால் சில பகுதிகளுக்கு இரு கட்டங்களாக தலா 12 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

அதற்கமைய, இன்று (08) காலை 8.00 மணி முதல் இரவு 8.00 மணி வரையில் கலகெதர, இரிதா பொல, பின்னவல, வேவல்பனாவ, பிடும்பே, மீப்பே, மாவத்தகம, பாதுக்க, உடுமுல்ல, அருக்வத்த, வேரகல, போப்பே, மலகல, கஹவல, மில்லவ, கொட்டியங்கொட, போரகெதர, அங்கம்பிட்டிய, அங்கம்மன, மீரியகல்ல மற்றும் யடவத்துர ஆகிய பகுதிகளில் நீர்வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளது.