மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் ; ஆணுறைகளுக்கும் தட்டுப்பாடு!


மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் நிலமை காரணமாக மூலப்பொருட்களின் தட்டுப்பாடு மற்றும் அவற்றின் விலை உயர்வு காரணமாக ஆணுறைகளின் விலையும் உயரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆணுறை தயாரிப்பில் முக்கிய பொருட்களாக உள்ள சிலிகான் எண்ணெய் பற்றாக்குறை மற்றும் அமோனியா விலையேற்றம் பெரிய சவாலாக மாறியுள்ளது.

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம் காரணமாக செங்கடல் வழியாக நடைபெறும் கப்பல் போக்குவரத்து பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது.

இது ஆசியாவிலிருந்து ஐரோப்பாவிற்குச் செல்லும் மருத்துவப் பொருட்களின் வரவை தாமதப்படுத்துகிறது. ஆணுறை தயாரிப்புக்குத் தேவையான இயற்கை லேடெக்ஸ் பெரும்பாலும் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் இருந்து பெறப்படுகிறது.

இருப்பினும், சுத்திகரிப்பு மற்றும் லூப்ரிகண்டுகளுக்குத் தேவையான சிலிகான் எண்ணெய் மற்றும் அம்மோனியா போன்ற ரசாயனங்களின் விலை சர்வதேச அளவில் அதிகரித்துள்ளது.

உற்பத்திச் செலவு அதிகரிப்பதால், முன்னணி நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளின் விலையை 10% முதல் 20% வரை உயர்த்தக்கூடும் என சந்தை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.

இந்நிலையில் ஆணுறைகளின் விலை உயர்வு அல்லது தட்டுப்பாடு காரணமாக மக்கள் ஆணுறை பயன்பாட்டைக் குறைத்தால், அது திட்டமிடப்படாத கருத்தரிப்பு மற்றும் பால்வினை நோய்கள் பரவுவதற்கு வழிவகுக்கும் என சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.