டெல்லி - கொழும்பு இடையே நேரடி புதிய விமான சேவை!


இந்தியாவின் IndiGo விமான சேவை டெல்லி மற்றும் கொழும்புக்கு இடையே நேரடி புதிய விமான சேவைகளை ஆரம்பிப்பதன் மூலம் இலங்கைக்கான தனது வான்வழித் தொடர்புகளை மேலும் பலப்படுத்துகிறது.

இந்த விமான சேவை எதிர்வரும் மார்ச் மாதம் 29 திகதி முதல் ஆரம்பமாகவுள்ளது. வாரத்திற்கு ஆறு நேரடி விமானங்கள் இந்த வழித்தடத்தில் இயக்கப்படும்.

இச்சேவைக்காக A320 ரக விமானங்கள் பயன்படுத்தப்படும், இது பயணிகளுக்கு தடையற்ற மற்றும் வசதியான பயணத்தை வழங்கும். இந்தியா மற்றும் இலங்கை இடையே ஆழமான வரலாற்று, கலாசார மற்றும் பொருளாதார உறவுகள் உள்ளன.

மேம்படுத்தப்பட்ட இந்த வான்வழித் தொடர்பு, இரு அண்டை நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம் மற்றும் சுற்றுலாவை மேம்படுத்துவதன் மூலம் இந்த உறவுகளை கணிசமாக வலுப்படுத்தும்.

இலங்கை செய்திகள் இந்தப் புதிய விமான சேவைகளுடன் சேர்த்து, IndiGo நிறுவனம் இந்தியாவின் ஐந்து நகரங்களில் இருந்து (மும்பை, பெங்களூரு, ஹைதராபாத், சென்னை மற்றும் தற்போது டெல்லி) கொழும்புக்கு வாரத்திற்கு 55-க்கும் மேற்பட்ட விமானங்களை இயக்கவுள்ளது.

அதேவேளை சென்னை மற்றும் திருச்சிராப்பள்ளியில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு வாரத்திற்கு பத்து விமான சேவைகளை IndiGo இயக்குகிறது. இந்த விரிவாக்கம் இலங்கையில் IndiGo-வின் நிலையை உறுதிப்படுத்துவதுடன், மலிவான மற்றும் நம்பகமான பயண அனுபவத்தை வழங்குகிறது.

மேலும் பயணிகள் தங்கள் பயணசீட்டை பெற IndiGo-வின் உத்தியோகபூர்வ இணையதளம் (www.goIndiGo.in), கைபேசி செயலி அல்லது அங்கீகரிக்கப்பட்ட பயண முகவர்கள் ஊடாக முன்பதிவு செய்யலாம்.