சர்வதேச சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்!
சர்வதேச சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை இன்றும் குறிப்பிடத்தக்க அதிகரிப்பை பதிவுசெய்துள்ளது.
நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில், சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 110.81 டொலர்கள் அதிகரித்து 4,493.79 அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது.
இது 2.53% அதிகரிப்பாகும். அதேபோல், வெள்ளி விலையிலும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. அதன்படி, ஒரு அவுன்ஸ் வெள்ளியின் விலை 1.94 டொலர்களால் அதிகரித்து 69.77 டொலர்களாகப் பதிவாகியுள்ளது.
இது, 2.85% அதிகரிப்பாகும். சர்வதேச அரசியல் நகர்வுகள் மற்றும் மத்திய கிழக்கில் நிலவி வரும் போர்ச் சூழலுக்கு மத்தியில், கடந்த சில நாட்களாக உலகச் சந்தையில் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்தைப் பதிவு செய்து வருகிறது.
Tags:
உலகம்
