விவாகரத்து சர்ச்சை; திருமண விழாவிற்கு ஒரே நிறத்திலான ஆடைகளை அணிந்து நடிகை த்ரிஷாவுடன் வந்த விஜய்!
தவெக தலைவர் விஜய் , நடிகை த்ரிஷாவுடன் AGS குழுமத்தின் உரிமையாளர்களில் ஒருவரான கல்பாத்தி எஸ். சுரேஷின் மகன் திருமண வரவேற்பு விழாவில் கலந்துகொண்ட புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
ஒரே காரில் வந்திறங்கிய இருவரும், ஒரே நிறத்திலான ஆடைகளை அணிந்து வந்திருந்தது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.
விஜய்யின் மனைவி சங்கீதா, செங்கல்பட்டு குடும்பநல நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி மனுத்தாக்கல் செய்திருந்தமை தமிழகத்தில் பரபரப்பாக பேசப்பட்டது.
நடிகை ஒருவருடனான தொடர்பே விவாகரத்துக் கோரக் காரணம் என சங்கீதா குறிப்பிட்டிருந்த நிலையில், சமூக வலைதளங்களில் அவரை த்ரிஷாவுடன் இணைத்து பல்வேறு விடயங்கள் பேசப்பட்டு வருகின்றன.
இந்த விவகாரம் குறித்து விஜய் அல்லது த்ரிஷா தரப்பிலிருந்து இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ விளக்கமும் அளிக்கப்படாத நிலையில், இருவரும் பொது நிகழ்ச்சியில் ஒன்றாகப் பங்கேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Tags:
இந்திய செய்தி
