ஈரான் கப்பல் தொடர்பில் விசேட அறிக்கை!
ஈரானிய கப்பல் விவகாரத்தில் பரஸ்பர முரண்பாடுகளுடன் கூடிய கருத்துகள் முன்வைக்கப்படுவதாகவும் இதுதொடர்பில் உண்மைகளைக் கண்டறிந்ததன் பின்னர் பாராளுமன்றத்தில் அறிக்கை ஒன்றை வெளியிடவுள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று (26) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும்போதே இதனைக் குறிப்பிட்டார்.
இதுதொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
‘ஈரானிய கப்பல்கள் விவகாரத்தில் உண்மையான சரியான தகவலை அறிந்துகொண்டதன் பின்னர் இதுதொடர் பில் கருத்து முன்வைக்கக் கூடியதாக இருக்கும். இந்தக் கப்பல்கள் விவகாரத்தில் இரு பரஸ்பர முரண்பாடாக கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன. ஜனாதிபதி ஒரு கருத்தைக் கூறுகிறார். ஈரானிய தூதுவர் இன்னுமொரு கருத்தை முன்வைக்கிறார்.
இருந்தபோதும் இந்த விடயங்கள் குறித்து ஆராய வேண்டியுள்ளது. ஆராய்ந்ததன் பின்னர் உத்தியோகபூர்வ தகவல்களைப் பெற்றுக்கொண்டு பாராளுமன்றத்தில் இதுதொடர்பில் அறிக்கையொன்றை சமர்ப்பிக்க எதிர்பார்த்துள்ளேன்’’ என்றார்.
