ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டமை இலங்கையை பாதிக்காது; விஜித ஹேரத்!
ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டால், அது இலங்கையின் எரிபொருள் இறக்குமதிக்கு நேரடிப் பாதிப்பை ஏற்படுத்தாது என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற அமர்வில் உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள பதற்ற நிலை காரணமாக ஹோர்முஸ் நீரிணை (Strait of Hormuz) மூடப்பட்டால், அது இலங்கையின் எரிபொருள் இறக்குமதிக்கு நேரடிப் பாதிப்பை ஏற்படுத்தாது .
இலங்கை தற்போது எரிபொருள் இறக்குமதிக்கு ஹோர்முஸ் நீரினையைப் பயன்படுத்துவதில்லை.
ஹோர்முஸ் நீரிணைக்கு மாற்றாக, இலங்கை தற்போது ஆப்பிரிக்க நன்னம்பிக்கை முனை ஊடாகச் செல்லும் கடல் வழித்தடங்களையே எரிபொருள் இறக்குமதிக்குப் பயன்படுத்தி வருகிறது.
இந்த நீரிணை மூடப்படுவது உலகளாவிய எரிபொருள் உற்பத்தி மற்றும் போக்குவரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்றாலும், இலங்கைக்கு அது ஒரு பிரதான தடையாக அமையாது.
ஏற்கனவே மாற்று வழிகள் மூலமே எரிபொருள் கொண்டு வரப்படுவதால், இந்த நெருக்கடி நிலை இலங்கையைப் பாதிக்காது என அவர் மேலும் தெரிவித்தார்.
