கொழும்பு மாநகர சபை உறுப்பினர் பதவியிலிருந்து சொஹாரா புஹாரி நீக்கம்!


கொழும்பு மாநகர சபை உறுப்பினர் பதவியிலிருந்து மொஹமட் பாத்திமா சொஹாரா புஹாரி நீக்கப்பட்டுள்ளார்.



கட்சியின் தீர்மானத்துக்கு எதிராக, தேசிய மக்கள் சக்தியின் வரவு - செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்தமையால், அவரது கட்சி உறுப்புரிமையை இடைநிறுத்த இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



அவரது பதவியை இரத்துச் செய்து வர்த்தமானி அறிவித்தல் வெளியிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.