யாழில் பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்ட சிறுவன் - பொலிஸ் ஊடகப் பிரிவின் தவறான தகவல்!


அல்லைப்பிட்டி பகுதியில் பொலிஸாரால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட வட்டுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த சிறுவனுக்கு 19 வயது என பொலிஸ் ஊடகப் பிரிவானது நேற்று வெளியிட்ட ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

குறித்த இளைஞன் 2008.11.09 அன்றே பிறந்திருந்தார். அந்தவகையில் அவரது வயது 17+. இந்த வருடம் 11ஆம் மாதம் 09ஆம் திகதி வந்தாலே வயது 18 ஆகும்.



குறித்த இளைஞன் பயணித்த வாகனத்தில் இருந்து சந்தேகத்துக்கிடமான முறையில் வாள், கயிறு மற்றும் மாட்டு சாணகம் என்பன மீட்கப்பட்டிருந்தன. 

இவை பேசுபொருளாக மாறியுள்ள நிலையில், பொலிஸ் ஊடகப் பிரிவின் இந்த அறிக்கையும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.