லிட்ரோ நிறுவனத்தின் விசேட அறிவிப்பு!
லிட்ரோ நிறுவனம் ஏற்கனவே 3 இலட்சம் எரிவாயு சிலிண்டர்களை சந்தைக்கு விநியோகிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் நாட்டின் பல பகுதிகளில் தொடர்ந்தும் எரிவாயு பற்றாக்குறை நிலவுவதால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
நாட்டில் நிலவும் எரிவாயு பற்றாக்குறை காரணமாக 3,900 மெட்ரிக் தொன் லிட்ரோ எரிவாயுவுடனான கப்பல் ஒன்று நேற்று (23) நாட்டை வந்தடைந்துள்ளது.
மேலும் நாளை (25) மற்றும் 28ஆம் திகதி 7,600 மெட்ரிக் தொன் எரிவாயுவை ஏற்றிக்கொண்டு இரண்டு கப்பல்கள் நாட்டுக்கு வரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Tags:
இலங்கை செய்தி
