மின் கட்டணத்தை அதிகரிக்குமாறு மின்சார சபை கோரிக்கை!


2026 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்கான மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பில் இலங்கை மின்சார சபையினால் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் யோசனையொன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. 

இதற்கமைய, மின்சாரக் கட்டணத்தை 13.56% ஆல் அதிகரிக்குமாறு அந்த யோசனையின் மூலம் கோரப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

ஏப்ரல் 01 ஆம் திகதி முதல் ஜூன் 30 ஆம் திகதி வரையிலான காலப்பகுதிக்காக இந்த மின்சாரக் கட்டணத் திருத்தக் கோரிக்கையை இலங்கை மின்சார சபை முன்வைத்துள்ளது.