பார்வதி, கம்ருதீனுக்கு Red Card கொடுத்து வெளியே அனுப்பிய விஜய் சேதுபதி : சாண்ட்ரா காலில் விழுந்த கம்ருதீன்!


விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் 9 நிகழ்ச்சி தற்போது பரபரப்பின் உச்சத்தில் உள்ளது. இந்த சீசனில் பார்வதி மற்றும் கம்ருதீன் ஆகியோர் மக்களிடையே கடும் எதிர்ப்பை சந்தித்து வந்தனர்.

TTF டாஸ்கின் போது இருவரும் நடந்து கொண்ட விதம், குறிப்பாக சாண்ட்ராவை கீழே தள்ளியது, உடல்நலக் குறைவு ஏற்பட்ட நிலையிலும் அவமதிக்கும் வகையில் பேசியது ஆகியவை பார்வையாளர்களிடையே பெரும் கோபத்தை உருவாக்கின. இதனை சமூக வலைதளங்களில் ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் கடுமையாக விமர்சித்தனர்.

இந்த நிலையில், இன்று வெளியான புரொமோவில் விஜய் சேதுபதி பார்வதி மற்றும் கம்ருதீனை கடுமையாக கண்டித்தார். மேலும், ரசிகர்கள் எதிர்பார்த்தபடி இருவருக்கும் Red Card வழங்கப்பட்டு நிகழ்ச்சியிலிருந்து வெளியே அனுப்பப்பட்டனர்.

புரொமோவில் மேலும், திவ்யா கம்ருதீனை நோக்கி, “நான் சொன்னேனே, அவள் உன்னை trigger செய்கிறாள் என்று” என கூறும் காட்சியும் இடம்பெற்றுள்ளது. வினோத்தும் இதே கருத்தை கம்ருதீனிடம் தெரிவிக்கிறார்.

இதையடுத்து கம்ருதீன் சாண்ட்ராவின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்கிறார். பார்வதியும் தனது செயல் தவறு என ஒப்புக்கொள்வது போல் பேசுகிறார்.


இந்த சம்பவம் தொடர்பாக சமூக வலைதளங்களில் ரசிகர்கள் தொடர்ந்து தங்கள் கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.