புதுவருடத்தில் அதிர்ச்சி தந்த தங்க விலை!


நாட்டில் 24 கரட் தங்க பவுண் ஒன்று, நேற்றையதினத்துடன் ஒப்பிடுகையில் இன்று சற்று அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை நகை வியாபாரிகள் சங்கம் தெரிவித்தது. 

அதற்கமைய, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று, 2,000 ரூபாயினால் அதிகரித்துள்ளது. 

இதற்கமைய 24 கரட் தங்கம் பவுண் ஒன்று, 356,000 ஆயிரம் ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. 

அத்துடன் 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 329,300 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. 

இந்தநிலையில் 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 44,500 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 41,162 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது. 

இதேவேளை உலக சந்தையிலும், தங்கத்தின் விலையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கமைய ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை, 4,377 டொலராக நிலவுகிறது.