நடிகைகளிடம் பணம் மற்றும் பாலியல் இலஞ்சம் கோரியவருக்கு விளக்கமறியல்!
பிரபல திரைப்பட இயக்குனர் சனத் அபேசேகரவின் பெயரைத் தவறாகப் பயன்படுத்தி, பெண்களிடம் பாலியல் இலஞ்சம் கோரிய நபர் ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சந்தேகநபரை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் கைது செய்து, இன்று (12) கொழும்பு புதுக்கடை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தினர்.
குறித்த நபர், இயக்குனர் சனத் அபேசேகரவின் பெயரில் போலியான Facebook கணக்கு ஒன்றை உருவாக்கி, அதன் மூலம் திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு தருவதாகக் கூறி, நடிகைகளிடம் பணம் மற்றும் பாலியல் இலஞ்சம் கோரியுள்ளார்.
இது தொடர்பில் சனத் அபேசேகர குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு அளித்திருந்தார்.
அதன்படி கைது செய்யப்பட்ட சந்தேகநபரை எதிர்வரும் நவம்பர் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Tags:
இலங்கை செய்தி