உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!


நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள் கசிவு தொடர்பான விசாரணையை குற்றப் புலனாய்வுப் பிரிவு தொடங்கியுள்ளது.

கொழும்பில் நேற்று (25) நடைபெற்ற வாராந்திர அமைச்சரவை ஊடகவியலாளர் சந்திப்பின் போது பேசிய வெகுஜன ஊடக அமைச்சர் கலாநிதி நளின் ஜெயதிஸ்ஸ இநத் விடயத்தை உறுதிபடுத்தினார்.

பொருளியல் பரீட்சை இடம்பெறுவதற்கு முன்னர் ஊகங்களின் அடிப்படையில் வினாக்கள் வழங்கப்பட்டதன் காரணமாக குறித்த பரீட்சையின் வினாத்தாள் கசிந்துவிட்டதாக சமூக ஊடகங்களில் பல்வேறு கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றன.

இது தொடர்பாக சில ஆசிரியர் தொழிற்சங்கங்களும் ஊடகங்களுக்கு பல கருத்துக்களை வௌியிட்டிருந்தமையும்  குறிப்பிடத்தக்கது.