உயர்தரப் பரீட்சையால் அச்சம்; பாடசாலையின் 3ம் மாடியிலிருந்து குதித்த மாணவி!


கொழும்பு - பம்பலப்பிட்டியில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றின் மூன்றாம் மாடியிலிருந்து குதித்த மாணவியொருவர் படுகாயமடைந்துள்ளார். 

மொரட்டுவ பிரதேசத்தைச் சேர்ந்த 19 வயதான குறித்த மாணவி, இம்முறை உயர்தரப் பரீட்சைக்கு இரண்டாவது தடவையாகத் தோற்றியுள்ளார்.

சம்பவம் உயிரியல் வினாத்தாள் தொடங்குவதற்கு சுமார் 15 நிமிடங்களுக்கு முன்பு இடம்பெற்றதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

மாணவி விழுந்த இடம் கார்பட் செய்யப்பட்ட பகுதியாக இருந்ததால், உயிர் தப்பியதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

அவரின் கால்களில் காயம் ஏற்பட்டதாகவும் உடனடியாக அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த மாணவி பரீட்சைக்குத் தோற்றுவது தொடர்பாக நீண்ட நாட்களாகவே அச்சத்தில் இருந்ததாக  குடும்ப உறுப்பினர்களின் வாக்குமூலங்களில் இருந்து தெரியவந்துள்ளதாக பொலிஸார்  தெரிவித்துள்ளனர்.

மேலதிக விசாரணைகளை பம்பலப்பிட்டி பொலிஸார்  மேற்கொண்டு வருகின்றனர்.