அவசரகால பேரிடர் மீட்புப் பணிகளை முன்னெடுக்க விசேட ஏற்பாடுகள்!


கொழும்பு மாநகர சபை (CMC) 2025 ஒக்டோபர் 16 முதல் 18 வரை அவசரகால பேரிடர் மீட்பு காலத்தை அறிவித்துள்ளது.

அந்த அறிவிப்பின்படி, மேல் மாகாணத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையுடன் கூடிய காலநிலை, இன்னும் சில தினங்களில் நாடு முழுவதும் நிலவலாமென எதிர்பார்க்கப்படும் நிலையிலேயே, கொழும்பு மாநகர சபை இதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளது.

இதற்கமைவாக சீரற்ற வானிலையால் பாதிக்கப்படும் குடியிருப்பாளர்களுக்கு உதவும் பொருட்டு, கொழும்பு மாநகர சபையின் பேரிடர் முகாமைத்துவம் மற்றும் அவசரகால மீட்புப் பிரிவுகள் முழுமையாக தயாராக வைக்கப்பட்டுள்ளதாக மாநகர சபை அறிவித்துள்ளது.

மேலும், விசாரணைகளுக்காக   இரண்டு தொலைபேசி எண்களை அறிவித்துள்ளது:011-2422222 மற்றும் 011-2686087.