நாளைய தினம் தமிழ் பாடசாலைகளுக்கான விடுமுறை தொடர்பில் வெளியான தகவல்!


வட மாகாணத்தில் உள்ள பாடசாலைகளில் நாளை (21) வழமை போன்று கற்றல் செயல்பாடுகள் முன்னெடுக்கப்படும் என மாகாண ஆளுநர் செயலகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பாடசாலைகள் விடுத்த கோரிக்கைக்கு இணங்க ஆளுநர்களின் அனுமதியுடன் கிழக்கு, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களில் உள்ள தமிழ் பாடசாலைகளுக்கு நாளை (21) விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.