இந்தியாவை சென்றடைந்த இலங்கை பிரதமர் ஹரிணிக்கு பலத்த வரவேற்பு!
பிரதமர் ஹரினி அமரசூரிய உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இந்தியாவின் புது டில்லியை சென்றடைந்துள்ளார்.
அவர் பிரதமராக பதவியேற்று இந்தியாவுக்கான முதல் விஜயமாக இது அமைந்துள்ளது.
புது டில்லியை சென்றடைந்த பிரதமரை இந்தியாவுக்கான இலங்கை உயர் ஸ்தானிகர் மஹிசினி கொலொன்னே உள்ளிட்ட குழுவினர் சம்பிரதாயபூர்வமாக வரவேற்றனர்.
இன்று முதல் எதிர்வரும் 18ஆம் திகதிவரை பிரதமர் ஹரினி அமரசூரிய இந்தியாவில் தங்கியிருப்பார் என தெரிவிக்கப்படுகின்றது.
பிரதமர் தனது விஜயத்தின் போது, இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடனும் உயர் மட்ட பிரதிநிதிகளுடனும் சில கலந்துரையாடல்களில் ஈடுபடவுள்ளார்.
ஒக்டோபர் 17 ஆம் திதகி NDTV மற்றும் சிந்தன் ஆராய்ச்சி அறக்கட்டளை ஏற்பாடு செய்யும் NDTV உலக உச்சி மாநாட்டில், "நிச்சயமற்ற காலங்களில் ஏற்படும் மாற்றங்களை வழிநடத்துதல்" என்ற தலைப்பில் பிரதமர் சிறப்புரையாற்றவுள்ளதாக வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு குறிப்பிட்டுள்ளது.