சீரற்ற வானிலையால் 12,142 பேர் பாதிப்பு!
நாட்டில் நிலவும் மோசமான காலநிலையால், 3,036 குடும்பங்களைச் சேர்ந்த 12,142 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
14 மாவட்டங்களில் வசிப்பவர்கள் பலத்த மழை மற்றும் காற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
காலநிலை மாற்றத்தினால் இடம்பெற்ற சம்பவங்களில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.
அண்மைக் காலங்களில் தொடர்ந்து பெய்த கன மழையினால் சுமார் 480 வீடுகள் சேதமடைந்துள்ளன.
இந்நிலையில் பேரிடர் அல்லது வானிலை தொடர்பான அவசர நிலை ஏற்பட்டால் 117 எனும் அவசர தொலைபேசி எண்ணுக்கு தொடர்புகொள்ளுமாறு அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவுறுத்தியுள்ளது.
Tags:
இலங்கை செய்தி
