வௌிநாடுகளில் இலங்கையை சேர்ந்த மேலும் 15 பாதாள உலகக் குழு உறுப்பினர்கள் கைது!
சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்ட இலங்கையின் மேலும் 15 பாதாள உலக குழு உறுப்பினர்கள் வௌிநாடுகளில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ரஷ்யா, ஓமான், ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் இந்தியாவில் அவர்கள் கைதாகியுள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால நேற்று (11) பாராளுமன்றில் தெரிவித்தார்.
அதன்படி, இந்த பாதாள உலக குழு உறுப்பினர்களை அந்த நாடுகளின் சட்ட நடவடிக்கைகள் நிறைவடைந்தவுடன் இலங்கைக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Tags:
இலங்கை செய்தி
