தமிழக வெற்றிக் கழகம் அறிமுகப்படுத்திய உறுப்பினர் சேர்க்கை செயலி!


2026 தேர்தலுக்கு தயாராகி வரும் தமிழக வெற்றிக் கழகம் (தவெக), கட்சியின் உறுப்பினர் அடையாளத்தை மேம்படுத்தும் நோக்கில் புதிய முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

உறுப்பினர் சேர்க்கையை விரைவாகவும், பொறுப்புடன் செய்யும் வகையில், புதிய உறுப்பினர் சேர்க்கை செயலி ஒன்றை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. 

இந்த செயலியை நாளை மறுதினம் தவெக தலைவர் விஜய் நேரடியாக அறிமுகப்படுத்தவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், உறுப்பினர் சேர்க்கை பதிவுகளை தலைமை நிர்வாகிகள் அவ்வப்போது பரிசீலனை செய்து வருகின்றனர். தவறான முறையில் உறுப்பினர் சேர்க்கை செய்யப்பட்டிருந்தால், சம்பந்தப்பட்ட முகவர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த புதிய செயலி, கட்சியின் உறுப்பினர் பட்டியலை துல்லியமாக வைத்திருக்கவும், எதிர்வரும் தேர்தலுக்கான தரவுகளை முறையாக மேம்படுத்தவும் உதவவுள்ளது.