இயற்கை எரிவாயுவின் விலை அதிகரிப்பு!


உலக சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை அதிகரிப்பை பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதற்கமைய,  இன்று (3) இயற்கை எரிவாயுவின் விலை 3.63 அமெரிக்க டொலராக அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.

மேலும் சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினம் சற்று வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.   

உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 58.29 அமெரிக்க டொலராக வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது. 

அத்துடன் பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 61.29 அமெரிக்க டொலராக வீழ்ச்சியடைந்துள்ளது.