போதைப்பொருள் பாவிக்க மனைவி பணம் கொடுக்க மறுத்ததால் இளம் குடும்பஸ்தர் உயிர்மாய்ப்பு!
யாழில் போதைப்பொருள் பாவிப்பதற்கு மனைவி பணம் கொடுக்காததால் இளம் குடும்பஸ்தர் ஒருவர் வியாழக்கிழமை (08) தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளார்.
அராலி - வசந்தபுரம் பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
குறித்த நபர் வியாழக்கிழமை (08) காலை இவ்வாறு மனைவியிடம் பணம் கேட்டுள்ளார்.
அதற்கு மனைவி, தன்னிடம் பணம் இல்லை என கூறியுள்ளார்.
இதனால் மனவிரக்தியடைந்த குறித்த குடும்பஸ்தர் தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளளார்.
Tags:
இலங்கை செய்தி