மியன்மாரில் பாடசாலை மீது வெடிகுண்டு தாக்குதல் - 20 மாணவர்கள் உயிரிழப்பு!


மத்திய மியன்மாரின் தபாயின் நகரத்தில் உள்ள கிராமத்தின் மீது நேற்று காலை 9 மணி அளவில் இராணுவத்தினர் விமானங்களில் இருந்து தாக்குதல் நடத்திய வேளையில்,  அந்த பகுதியில் இருந்த பாடசாலை மீது ஒரு போர் விமானம் வீசிய வெடிகுண்டு விழுந்து வெடித்தது.

இதையடுத்து தாக்குதல் நடந்த இடத்திற்கு விரைந்து வந்த போராட்டக்காரர்கள் தாக்குதலில் காயமடைந்தவர்களை மீட்டனர். இந்த கொடூர தாக்குதலில் 20 மாணவர்களும், 2 ஆசிரியர்களும் கொல்லப்பட்டுள்ளனர். 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த சம்பவத்தில் அருகிலுள்ள 3 வீடுகள் சேதமடைந்தன.