வாகன விற்பனையில் வீழ்ச்சி!
அண்மையில் இறக்குமதி செய்யப்பட்ட புதிய வாகனங்களின் விற்பனை கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
அரசாங்கம் இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு அதிகளவான வரி விதித்துள்ளமை காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக வாகன விற்பனையாளர் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
பயன்படுத்தும் அதிசொகுசு வாகனங்கள் வழமை போன்று விற்பனையாகும் அதே நேரம் மத்திய தர வர்க்கத்தினர் பயன்படுத்தும் வாகனங்களின் விற்பனை பாரியளவில் சரிவைச் சந்தித்துள்ளதாக அவர்கள் குறிப்பிடுகின்றனர்.
இதன் காரணமாக வாகன இறக்குமதி மூலமாக அரசாங்கம் எதிர்பார்த்த வரி வருமானம் கிடைக்காமல் போகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
Tags:
இலங்கை செய்தி