பாடசாலைகள் மீள ஆரம்பமாகும் திகதி அறிவிப்பு!
நாட்டில் ஏற்பட்ட அண்மைய அனர்த்தங்கள் காரணமாக மூடப்பட்டிருந்த பாடசாலைகளை மீண்டும் திறப்பதற்கான முடிவை கல்வி அமைச்சு எடுத்துள்ளது.
அதன்படி, மேல், வடக்கு, கிழக்கு, சபரகமுவ, வட மத்திய மற்றும் தென் மாகாணங்களில் உள்ள பாடசாலைகள் வரும் 16 ஆம் திகதி முதல் மீளத் திறக்கப்படும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
நாட்டில் மொத்தம் 10,076 பாடசாலைகள் உள்ள நிலையில், அவற்றில் 9,929 பாடசாலைகள் 16 ஆம் திகதி மீண்டும் செயல்பாட்டுக்கு வருவதாக கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவெவ தெரிவித்துள்ளார்.
Tags:
இலங்கை செய்தி
