திடீரென உயிரிழந்த யுவதி ; பிரேத பரிசோதனையில் வெளியான அதிர்ச்சி தகவல்!


யாழில் யுவதி ஒருவர் திடீரென மயக்கமடைந்த நிலையில் நேற்றிரவு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

8ஆம் கட்டை, மல்லாகம் பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த யுவதி நேற்றையதினம் இரவு சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது.

இந்நிலையில் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளையில் உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

பின்னர் உடற்கூற்று பரிசோதனைகளுக்காக சடலம் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையிலிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.

இதயம் செயலிழந்ததால் மரணம் சம்பவித்துள்ளதாக உடற்கூற்று பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது.