அமெரிக்காவுக்கான இறக்குமதி வரியை அதிரடியாக அதிகரித்த சீனா..!


அமெரிக்கா நேற்று முதல் சீனப் பொருட்களுக்கு 100 சதவிகிதத்திற்கும் அதிகமான இறக்குமதி வரி விதிப்பை அமலாக்கியுள்ளது. இதற்கு பதிலளித்த சீனாவும் அமெரிக்காவிலிருந்து இறக்குமதியாகும் அனைத்து பொருட்களுக்கும் 84 சதவிகித வரியை விதிப்பதாக அறிவித்துள்ளது.

இதன் விளைவாக, இரு நாடுகளுக்கும் இடையில் முழுமையான வர்த்தகப் போர் வெடித்துள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ள வரிவிதிப்புகளுக்கு எதிராக, "தேவைப்பட்டால் கடைசி வரை போராடுவோம்" என சீன வெளியுறவு அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது. மேலும், வெள்ளை மாளிகை "கொடுமையான நடைமுறைகளை" பின்பற்றுவதாக சீனா குற்றம்சாட்டியுள்ளது.

இதற்காக சீனா, 6 அமெரிக்க நிறுவனங்களை ‘நம்பகத்தன்மையற்ற நிறுவனங்கள்’ பட்டியலில் சேர்த்துள்ளது. சீனாவின் பதிலடி நடவடிக்கையை தொடர்ந்து, டொனால்ட் டிரம்ப் தனது சமூக வலைதள பக்கத்தில், "இது வர்த்தக நிறுவனங்கள் சீனாவிலிருந்து அமெரிக்காவுக்கு திரும்பவேண்டிய சரியான நேரம்" என கருத்து தெரிவித்துள்ளார்.