அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பின் விசேட அறிவிப்பு - வரி அதிகரிப்பு தற்காலிக நிறுத்தம்


அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 75 நாடுகள் மீதான வரிகளை 90 நாட்களுக்கு இடைநிறுத்தி, வரியை 10% ஆக வைத்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.

ஆனால் அமெரிக்காவின் வரி அதிகரிப்புக்கு பதிலடி கொடுத்த சீனா மீதான வரிகளை 125% ஆக உயர்த்தியுள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.

'அமெரிக்காவையும் பிற நாடுகளையும் சீர்குலைக்கும் நாட்கள் இனி நிலையானவை அல்ல என்பதை சீனா உணரும்' என்று டிரம்ப் மேலும் கூறியுள்ளார்.