பல பில்லியன் இலாபத்தை ஈட்டிய மின்சார சபை!
மின்சாரக் கட்டணம் இருமுறை குறைக்கப்பட்ட போதிலும், கடந்த ஆண்டு இலங்கை மின்சார சபை 148.6 பில்லியன் ரூபாய் இலாபம் ஈட்டியுள்ளது.
இதன் விளைவாக, 2023 ஆம் ஆண்டின் இறுதியில் 292.8 பில்லியன் ரூபாயாக இருந்த இலங்கை மின்சார சபையின் குறுகிய கால கடன்கள் மற்றும் பொறுப்புகள், 2024 ஆம் ஆண்டில் 123.6 பில்லியன் ரூபாயாகக் குறைந்துள்ளது என மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
அதேபோல், நீண்டகால கடன்கள் 413.3 பில்லியன் ரூபாயிலிருந்து 409 பில்லியன் ரூபாயாகக் குறைந்துள்ளது.
இருப்பினும், மின்சார சபை தனது செலவுகளைக் குறைக்காமல் மேலும் கட்டணக் குறைப்புகளை மேற்கொள்ளக் கூடாது என மத்திய வங்கி, தனது வருடாந்திர பொருளாதார மதிப்பாய்வு அறிக்கையில் எச்சரித்துள்ளது.
Tags:
இலங்கை செய்தி
