தங்கம் வாங்க காத்திருப்போருக்கு அதிர்ச்சி..!
இலங்கையில் தங்கத்தின் விலை கடந்த சில மாதங்களாக சிறிய ஏற்ற இறக்கங்களுடன் காணப்பட்டு வந்த நிலையில், இன்றைய தினம் அதில் சற்று உயர்வு காணப்படுகின்றது.
நேற்றைய விலையுடன் ஒப்பிடுகையில், இன்று (ஏப்ரல் 09) ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 899,105 ரூபாவாக விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன் அடிப்படையில், 24 கரட் தங்கத்தின் ஒரு கிராம் விலை 31,720 ரூபாவாக பதிவாகியுள்ளது. இதே தரத்தில் உள்ள ஒரு பவுண் தங்கத்தின் விலை 253,750 ரூபாவாக பதிவாகியுள்ளது. மேலும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 29,080 ரூபாவாக இருந்த நிலையில், அதற்கேற்ப ஒரு பவுண் விலை 232,650 ரூபாவாக நிலைபெற்றுள்ளது.
இதனுடன், 21 கரட் தங்கத்தின் விலையும் குறிப்பிடத்தக்க வகையில் பதிவாகியுள்ளது; ஒரு கிராம் 27,760 ரூபாவாகவும், பவுண் ஒன்றின் விலை 222,050 ரூபாவாகவும் உள்ளது.
இவற்றுடன், கொழும்பு செட்டியார் தெருவில் உள்ள தங்க விலை நிலவரங்களின்படி, 24 கரட் தங்கப் பவுண் ஒன்று 243,000 ரூபாவாகவும், 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 223,500 ரூபாவாகவும் காணப்படுகிறது.
இந்த விலைகளிலிருந்து தங்க ஆபரணங்களின் விலை மாற்றமடையலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.