உலகின் பலம்வாய்ந்த நாடுகளை பின்தள்ளி முதலிடம் பிடித்த இலங்கை

 

உலகின் குடும்பங்களுக்கு மிகவும் உகந்த நாடாக இலங்கை முதலிடத்தில் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது. கோண்டே நாஸ்ட் டிராவலர் மற்றும் ரெமிட்லியின் குடியேற்ற குறியீட்டின் புதிய அறிக்கையில், இலங்கை உலகின் குடும்பங்களுக்கு மிகவும் உகந்த நாடாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.


கல்வித் தரம் மற்றும் குழந்தை பராமரிப்பு செலவுகளை அடிப்படையாகக் கொண்ட இந்த தரவரிசையில், இலங்கைக்கு வலுவான கல்வி மதிப்பெண் (0.7/1.0) மற்றும் வெறும் $354.60 வருடாந்த குழந்தை பராமரிப்பு செலவு காரணமாக முதலிடத்தில் இடம் பெற்றுள்ளது.


சுவீடன் மற்றும் நோர்வே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களைப் பிடித்தன, அத்துடன் அமெரிக்கா 10வது இடத்தை பிடித்துள்ளது.