உயர்வடையும் ரூபாவின் பெறுமதி


இலங்கை மத்திய வங்கி (Central Bank of Sri Lanka) இன்றைய நாளுக்கான (19.03.2025) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 291.80 ரூபாயாகவும், விற்பனைப் பெறுமதி 300.31 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது.

ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 377.76 ரூபாயாக இருக்கின்றது, மேலும் விற்பனைப் பெறுமதி 391.93 ரூபாயாக உள்ளது.

யூரோவின் கொள்முதல் பெறுமதி 317.48 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், அதன் விற்பனைப் பெறுமதி 330.38 ரூபாயாகவும் காணப்படுகிறது.

கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 202.65 ரூபாயாகவும், விற்பனைப் பெறுமதி 211.30 ரூபாயாகவும் உள்ளது.

அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 183.66 ரூபாயாகவும் அதன் விற்பனைப் பெறுமதி 193.11 ரூபாயாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது.