தங்கம் வாங்கவுள்ளோருக்கு முக்கிய அறிவிப்பு!


சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களுக்கு ஏற்ப, இலங்கையின் உள்நாட்டு தங்க விலையிலும் தொடர்ந்து ஏற்ற இறக்கங்கள் பதிவாகி வருவதாக நகை வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இன்று சற்று குறைந்துள்ளது.

நேற்று ஒரே நாளில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 98 அமெரிக்க டொலர்களால் அதிகரித்து 4,355 அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியிருந்தது.

எனினும், இன்று ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 4,342 அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளது.

இதன்படி, நேற்றைய விலையுடன் ஒப்பிடுகையில் இன்று ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 13 அமெரிக்க டொலர்களால் குறைந்துள்ளது.

இதேவேளை, சர்வதேச சந்தையில் வெள்ளியின் விலையிலும் இன்று சற்று வீழ்ச்சி பதிவாகியுள்ளது.

அதன்படி, ஒரு அவுன்ஸ் வெள்ளி இன்று 63.58 அமெரிக்க டொலர்களாக விற்பனை செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.