உலக தாய்ப்பால் வாரம்: இலங்கையில் இன்று முதல் தாய்ப்பால் வாரம் பிரகடனம்!


உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு, இலங்கையில் இன்று (01) முதல் எதிர்வரும் 7 ஆம் திகதி வரை 'தாய்ப்பால் வாரம்' பிரகடனம் செய்யப்பட்டுள்ளதாக குடும்ப நலப் பணியகத்தின் குழந்தை போசாக்குப் பிரிவின் சமூக மருத்துவ நிபுணர் ஹிரண்யா ஜெயவிக்ரம தெரிவித்துள்ளார்.

சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

தாய்ப்பாலின் முக்கியத்துவம் மற்றும் அதன் நன்மைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு, அது தொடர்பான சரியான அறிவை வழங்குவதே இந்த வாரத்தின் பிரதான நோக்கமாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.