பொதுநலவாய விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்ற ருமேஷ் தரங்கவுக்கு ஜனாதிபதி வாழ்த்து!
2026 பொதுநலவாய விளையாட்டுப் போட்டியின் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் பிரிவில் தங்கப் பதக்கம் வென்ற இலங்கை வீரர் ருமேஷ் தரங்க பத்திரகேவுக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தனது உத்தியோகபூர்வ சமூக ஊடகப் பக்கத்தின் ஊடாக வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், ருமேஷ் தரங்க பத்திரகே வென்ற தங்கப் பதக்கம் நாடு கண்ட பொன்னான கனவை நனவாக்கிய பெருமைமிக்க சாதனை என குறிப்பிட்டுள்ளார்.
மேலும், "ருமேஷ் தரங்க, உங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்" எனத் தெரிவித்து, அவரது வெற்றிக்கு பாராட்டுகளைப் பதிவு செய்துள்ளார்.
