நாட்டில் 87 ஆயிரத்தை நெருங்கிய டெங்கு நோயாளிகள்; 62 உயிரிழப்புகள் பதிவு!


நாட்டில் இந்த ஆண்டில் பதிவான டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 87 ஆயிரத்தை நெருங்கியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.

நேற்று (03) நிலவரப்படி, மொத்தமாக 86,947 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளதுடன், ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் இதுவரை 1,598 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மாவட்ட வாரியாகப் பார்க்கையில், கம்பஹா மாவட்டத்திலேயே அதிகளவான டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளதுடன், மொத்த நோயாளிகளில் 21.24 சதவீதம் அந்த மாவட்டத்தைச் சேர்ந்தவர்களாக உள்ளனர்.

மேலும், கொழும்பு மாவட்டத்தில் 17,187 பேரும், கண்டி மாவட்டத்தில் 6,082 பேரும் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை டெங்கு காரணமாக 62 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதுடன், மரண விகிதம் 0.07 சதவீதமாக இருப்பதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.