‘க்ளோபல் ஸ்ரீலங்கன் குமர குமாரி 2026’ – மகுடம் சூடிய ஆஸ்திரேலியா, பிரான்ஸ் போட்டியாளர்கள்!
உலகின் தனித்துவமான கலாச்சார அழகுப்போட்டிகளில் ஒன்றான ‘க்ளோபல் ஸ்ரீலங்கன் குமர குமாரி 2026’ போட்டியின் இறுதிச்சுற்று மொறட்டுவை ரமாடியா கிராண்ட் ஹோட்டலில் கோலாகலமாக நடைபெற்றது.
13 நாடுகளைச் சேர்ந்த போட்டியாளர்கள் பங்கேற்ற இந்தப் போட்டியில், ஆண்கள் பிரிவில் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த குலன் திஸாநாயக்கவும், பெண்கள் பிரிவில் பிரான்ஸைச் சேர்ந்த சினாதி லியனகேவும் வெற்றியாளர்களாக மகுடம் சூடினர்.
இப்போட்டியானது இலங்கையின் கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் திறமைகளை சர்வதேச அரங்கில் வெளிப்படுத்தும் முக்கிய தளமாக அமைந்துள்ளது.
போட்டியின் முதன்மை அனுசரணையாளரான கண்டி ஸ்பைசஸ் அக்ரோ நிறுவனத்தின் தலைவர் கலாநிதி ருவன் ஹேரத் தெரிவிக்கையில், இலங்கையின் செழுமையான பாரம்பரியம், கலாச்சாரம் மற்றும் சுற்றுலா வாய்ப்புகளை சர்வதேச அளவில் அறிமுகப்படுத்துவதே போட்டியின் முக்கிய நோக்கம் எனக் குறிப்பிட்டார்.
மேலும், சுற்றுலாத்துறையின் ஊடாக நாட்டுக்கு அந்நியச் செலாவணியை ஈட்டுவதுடன், உள்ளூர் சமூகங்களின் வாழ்வாதாரத்தையும் மேம்படுத்த முடியும் என அவர் தெரிவித்தார்.
இதேவேளை, போட்டியின் நிறுவனரும் சர்வதேச இயக்குநருமான வசந்தி குணரத்ன, 13 நாடுகளைச் சேர்ந்த போட்டியாளர்கள் இதில் பங்கேற்றதாகத் தெரிவித்தார்.
உலகெங்கிலும் வாழும் இலங்கையர்களை ஒன்றிணைத்து, இலங்கையின் தேசிய அடையாளத்தையும் கலாச்சாரத்தையும் சர்வதேச அளவில் உயர்த்துவதற்கு இந்தப் போட்டி சிறந்த தளமாக அமைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
.jpeg.jpg)




