இலங்கையில் தங்க விலையில் மீண்டும் வீழ்ச்சி – ஒரு பவுணுக்கு ரூ.2,000 குறைவு!
இலங்கையில் இன்று (17) 24 கரட் தங்கத்தின் விலை ஒரு பவுணுக்கு 2,000 ரூபாயால் குறைந்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதன்படி, தற்போதைய தங்க விலை நிலவரத்தின்படி, 24 கரட் தங்கம் ஒரு பவுண் 374,000 ரூபாயாகவும், 22 கரட் தங்கம் ஒரு பவுண் 344,000 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
மேலும், 24 கரட் தங்கத்தின் ஒரு கிராம் 46,750 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராம் 43,000 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மைய நாட்களுடன் ஒப்பிடுகையில் தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள இந்த வீழ்ச்சி, நகை கொள்வனவு செய்ய எதிர்பார்த்துள்ளோருக்கு ஓரளவு நிவாரணமாக அமைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Tags:
இலங்கை செய்தி
