இன்று மீண்டும் வலுவடைந்த இலங்கை ரூபாய்!
அமெரிக்க டொலருக்கு நிகராக அண்மையில் மதிப்பிழந்து வந்த இலங்கை ரூபாய், இன்று (15) மீண்டும் வலுவடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
அதன்படி, இன்று அமெரிக்க டொலரின் கொள்முதல் விலை 326.34 ரூபாயாகவும், விற்பனை விலை 336.58 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது.
அதேவேளை, கடந்த வெள்ளிக்கிழமை (12) அமெரிக்க டொலரின் கொள்முதல் விலை 331.42 ரூபாயாகவும், விற்பனை விலை 341.36 ரூபாயாகவும் பதிவாகியிருந்தது.
இதன்மூலம், அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாயின் பெறுமதி இன்று சற்றே உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Tags:
இலங்கை செய்தி
