படுதோல்வியை சந்தித்த சீமான்!


2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள், நாம் தமிழர் கட்சிக்கும் அதன் ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களுக்கும் மிகப்பெரிய அரசியல் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக காரைக்குடி தொகுதியின் வாக்கு விபரங்கள், விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) எழுச்சி மற்ற கட்சிகளை எந்த அளவிற்கு பாதித்துள்ளது என்பதை தெளிவாக காட்டுகின்றன.

இந்தத் தொகுதியில் தவெக வேட்பாளர் பிரபு 34,782 வாக்குகள் பெற்று முதல் இடத்தை பிடித்து ஆதிக்கம் செலுத்தியுள்ளார்.

அவரைத் தொடர்ந்து காங்கிரஸ் வேட்பாளர் மாங்குடி 19,614 வாக்குகளுடன் இரண்டாம் இடத்தையும், அமமுக வேட்பாளர் தேர்போகி பாண்டி 8,920 வாக்குகளுடன் மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளனர்.

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் களம் கண்ட சீமான், வெறும் 7,625 வாக்குகள் மட்டுமே பெற்று நான்காவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.

குறிப்பாக, தவெக வேட்பாளர் பிரபு பெற்ற வாக்குகளின் நான்கில் ஒரு பகுதியையும் சீமான் நெருங்க முடியாத நிலை உருவாகியுள்ளது. இது அவரது ஆதரவாளர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.